நடிகர், குணச்சித்திரம், வில்லன், ஹீரோ என பலரையும் ஆச்சரியப்பட வைக்கிறவர் நடிகர் டெல்லி கணேஷ். நேற்று இரவு தூக்கத்தில் உயிர் பிரிந்தது. இது தமிழ்திரை உலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. கமலுடன் பல படங்களில் நடித்துள்ளார். அது ஒரு இனிய தருணம் என்கிறார் கமல்ஹாசன்.
கடைசி பேட்டி
அந்தவகையில் டெல்லிகணேஷின் கடைசி பேட்டி இதுதானாம். அதில் அவர் என்னென்ன சொல்றாருன்னு பாருங்க.
‘வல்லநாடு குளிக்க தோதுவான இடம்… அருமையான கோயில்… நல்ல லைஃப்… அந்த ஊரு. சில பல காரணங்களுக்காக அந்த ஊரை விட்டுக் கிளம்பி மதுரை, டெல்லின்னு டிராவல் பண்ணினேன். அப்படி ஊரை விட்டுக்கிளம்பிப் போனதனால தான் டெல்லிங்கற பேரே எனக்கு வந்தது. இன்னும் சொல்லணும்னா டெல்லிக்குப் போயி நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். சென்னைக்கு வந்து காத்தாடி ராமமூர்த்தியோட நாடகங்கள்ல நடிச்சேன்.
டெல்லி கணேஷ் பேரு
அந்த நாடகத்தைப் பார்த்துட்டு பாலசந்தர் திரைப்படத்துக்குக் கூப்பிட்டாரு. அவரு தான் ஒரு பேரு வேணும் உனக்கு. கணேஷ்ங்கற பேரு காணாது. அதுகூட ஒரு பேன்சியான பேரு வைக்கணும்னு சொன்னாரு. நீ ஆரம்பத்துல நாடகம் டெல்லில தான நடிச்சே. அப்போ டெல்லி கணேஷ்னு வச்சுக்கன்னு சொன்னாரு.
‘நெல்லை கணேஷ்னு வச்சிக்கறேன்’னு சொன்னேன். ‘அது வேண்டாம்யா. அரசியல்வாதி மாதிரி இருக்கு’ன்னுட்டாரு. அப்புறம் எங்க ஊரு வல்லநாடுங்கறதால ‘வல்லை கணேஷ்’னு வச்சிக்கரேன்’னு சொன்னேன். ‘நடிச்சாலே செக் வல்லை. பேமெண்ட் வல்லை’ன்னாரு. அப்புறம் உங்க பேருல இருந்து பாலசந்தர்னு இருக்குறதை பால கணேஷ். இல்லன்னா கணேஷ்சந்தர்னு சொன்னாரு.
Tag: நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்.. தூக்கத்திலேயே பிரிந்த உயிர்..
அதுக்கு ‘ஏன்யா என் பேரு முழுசா இருக்குறது பிடிக்கலையா? அதை ஏன் கட் பண்றேன்னாரு. ஒண்ணும் வேண்டாம். நீ டெல்லில தானே நடிச்சே. டெல்லி கணேஷ்னு வச்சிக்க’ன்னாரு. அப்படித்தான் ‘டெல்லி கணேஷ் வந்தது’ என்கிறார்.
பாலசந்தர் அறிமுகம்
பாலசந்தர் தான் ‘பட்டினப்பிரவேசம்’ என்ற படத்தில் அவரை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து தணியாத தாகம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன்பிறகு தனக்கு கதாநாயகன் தான் வேண்டும் என்றில்லை. நடிப்பதற்கு ஸ்கோப் கிடைச்சா போதும். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் வெளுத்து வாங்குவேன் என்று காமெடி, குணச்சித்திரம் என பின்னிப் பெடல் எடுத்துவிட்டார்.
இவர் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். கமல் மீது கொண்ட நட்பின் காரணமாக அவருடன் பல படங்களில் நடித்துள்ளார். நாயகன், மைக்கேல் மதன காமராஜன், தெனாலி…. அவ்வைசண்முகியில் காதுல பூ வைத்துக் கொண்டு வரும் டெல்லி கணேஷ் காமெடியிலும் கலகலப்பூட்டுவார்.