சமீபத்தில் மறைந்த டெல்லி கணேஷ் தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு. இவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். கமலின் நெருங்கிய நண்பர். கமல் தற்போது அமெரிக்காவில் இருந்தாலும் அவருக்கு இரங்கல் தெரிவித்து இருந்தார். அவரைப் பற்றி நாம் அறியாத பல தகவல்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
பிரதமர் இரங்கல்
இவரது மறைவுக்கு பிரதமர் மோடியே இரங்கல் தெரிவித்து இருந்தார். அதில் இவர் எந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் உணர்ச்சிப்பூர்வமாக செய்யக்கூடியவர் என்று குறிப்பிட்டு இருந்தார். அது தவிர சீமான் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் வந்து இரங்கல் தெரிவித்து இருந்தனர். இவருடன் பயணித்த தருணங்கள் அற்புதமானவை என கமல் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்து இருந்தார்.
எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் கொஞ்சம் கூட மிகையில்லாமல் நடிக்கக்கூடியவர் தான் டெல்லி கணேஷ். யாரிடமும் எந்தக் காழ்ப்புணர்ச்சியும் எந்தக் காலத்திலும் அவரிடம் இருந்ததில்லை. நம்ம தமிழ்சினிமாவைப் பொருத்தவரைக்கும் டெல்லிகணேஷ் போன்ற பல கலைஞர்களைக் கொண்டாடாமல் இருந்திருக்கிறோம் அப்படிங்கறது தான் உண்மை.
கடைசி படம்
தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் பல நூறு படங்களில் நடித்தவர் டெல்லி கணேஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் இந்தியன் 2. ஆனால் இவர் நடிச்ச கடைசி படம் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல். உதயகீதம் படத்தைத் இயக்கிய கே.ரங்கராஜ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் கே.ஆர்.விஜயாவுக்கு ஜோடியாக டெல்லி கணேஷ் நடித்துள்ளார்.
என்னுடைய நல்ல நண்பராக இருந்தவர் டெல்லி கணேஷ். நான் நாங்க தயாரிச்ச படத்துல ஜல்லிக்கட்டு, சின்னப்பதாஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சூரசம்ஹாரம் படத்தில் கேப்டன் ராஜூக்குக் குரலும் கொடுத்துள்ளார்.
யோசனை கேட்பார்
எப்போ அழைத்தாலும் உடனடியாக அலுவலகத்திற்கு வந்து விடுவார். டூரிங் டாக்கீஸில் மட்டும் 3 முறை அவரது பேட்டி வெளியாகி இருக்கிறது. அவருக்கு ஏதாவது ஒரு பிரச்சனைன்னா என்னிடம் பிரச்சனை என்றால் யோசனை கேட்பார்.
இந்த மாதிரி பிரச்சனையை எப்படி சமாளிக்கலாம் லட்சுமணன்னு கேட்பார். நானும் பல சமயங்களில் அவருக்கு யோசனை சொல்வேன். அவரது இழப்பின் மூலம் ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டேன்கறது தான் உண்மை. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.