சிவகார்த்திகேயனைப் பாராட்டிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

By John A

Published:

அமரன் திரைப்படம் வெளியாகி 1 மாதம் ஆன நிலையில் திரையரங்குகளில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் எய்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்கை அடிப்படையாகக் கொண்டு ராஜ்குமார் பெரியசாமி அமரன் படத்தினை இயக்கினார்.

கமல்ஹாசன் இப்படத்தினைத் தயாரித்திருந்தார். பல எதிர்பார்ப்புகளுக்கிடையே வந்த அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. சிவகார்த்திகேயன், சாய்பல்லவியின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு மற்றும் காட்சி அமைப்புகள், வசனங்கள் ஆகியவை படத்திற்குப் பெரிதும் பலம் சேர்த்தது.

இந்தப் படமெல்லாம் தேவாவுக்கு நடிக்க வந்த வாய்ப்பா? இருந்தும் நோ சொல்லிய காரணம்

படத்தினைப் பார்த்தவர்கள் கொண்டாடி வர, நல்ல விமர்சனங்களால் அமரன் வசூலில் சாதனை படைத்தது. இதுவரை சுமார் 400 கோடியைத் தொட்டிருக்கும் சூழலில் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர்களின் லிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கிறார். மேலும் இவர் ஏற்ற முகுந்த் வரதராஜன் கதபாத்திரம் சிவகார்த்திகேயனை மொழி கடந்து அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்திருக்கிறது.

மேலும் இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே ராணுவ அதிகாரிகள், வீரர்களுக்குப்போட்டுக் காட்டப்பட்டது. இதுமட்டுமன்றி இந்திய ராணுவமும் சிவகார்த்திகேயனை கௌரவித்தது.

முதல்வர் ஸ்டாலின் உள்பட பலரும் திரைப்படத்தினைப் பார்த்து படக்குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்தனர். கண்ணீரை வர வழைக்கும் கிளைமேக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் நடிப்பினைப் பார்த்து அழுகாதவர் எவரும் இருக்க முடியாது.

இந்நிலையில், அமரன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், படத்தின் வெற்றிக்கு வாழ்த்து கூறியுள்ளார். மேலும் படக்குழுவினரையும் பாராட்டினார். முன்னதாக அமரன் படத்திற்கு எஸ்டிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.