டிடிக்கு காலில் ஏற்பட்ட முறிவு.. அவரே வெளியிட்ட புகைப்படம்!!

திவ்யதர்சினி  விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார், தன்னுடைய 10 வது வயதில் தொகுப்பாளினியாக சன் தொலைக்காட்சியில் அறிமுகமாகி, ஏறக்குறைய 25 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக தொடர்ந்து இருந்து வருகிறார். இவர்…

திவ்யதர்சினி  விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார், தன்னுடைய 10 வது வயதில் தொகுப்பாளினியாக சன் தொலைக்காட்சியில் அறிமுகமாகி, ஏறக்குறைய 25 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக தொடர்ந்து இருந்து வருகிறார்.

இவர் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், நம்ம வீட்டுக் கல்யாணம், ஜோடி சீசன் 7, கெட் செட் கோ, மற்றும் காபி வித் டிடி  என பல நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக உள்ளார். மேலும் இவர் அவர் படித்த ஆதர்ஷ் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியும் வருகிறார். வெள்ளித் திரையிலும் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார்.

தற்போது கொரோனாவால் ஊரடங்கில் சினிமா மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது ஓய்வில் இருந்துவரும் டிடி என்னும் திவ்யதர்சினி   தனது பழைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

63db62feb2934b6d35ab6f7647c4c85b-1

அந்தவகையில் தனது இடது காலில் முறிவு ஏற்பட்டு, நடக்க முடியாமல் காலில் கட்டுடன் இருப்பதுபோன்ற ஒரு புகைப்படத்தினை வெளியிட்டு மேலும், “தனது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்ததாகக் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ரனீஷ் அவர்களுக்கும், பிசியோதெரபி அளித்து வரும் மருத்துவர்களுக்கும் நன்றி கூறியுள்ளார்.

இவர் 2017 ஆம் ஆண்டு விகடன் விருது விழாவில் சிறந்த தொகுப்பாளினியாக விருதினைப் பெற்றதும் அவரது காலில் ஏற்பட்ட விபத்து குறித்து கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனாலேயே சில வருடங்கள் ஓய்வில் இருந்த இவர் தற்போது கடந்த ஆண்டு முதல் மீண்டும் சின்னத் திரைக்குத் திரும்பியுள்ளார்.

ரசிகர்கள் பலரும் உங்களுக்கு எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும், எங்கள் ஆதரவு இருக்கும் என்பதுபோல் பதிவிட்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன