நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ஒரு வாரத்தை கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சில சிக்கலான காட்சிகளில் சொதப்பி உள்ளதாக விமர்சனங்கள் எழுகின்றன.
அது பற்றி ரசிகர்கள் கூறும் தகவல்களை இப்போது பார்ப்போம். ஜெயிலர் திரைப்படத்தை பொறுத்தவரை ரஜினி தான் பெரிய ஆள் என்பது போல் காட்டியிருப்பார். இவருக்கு எதிரான வில்லன் ரோல் சில இடங்களில் பலமாகவும், பல இடங்களில் குழப்பத்துடன் காட்சி படுத்தப்பட்டிருக்கும்.
’ஜெயிலர்’ கதையில் 50 வருடங்களுக்கு முன்பே நடித்த சிவாஜி கணேசன்.. என்ன படம் தெரியுமா?
ரஜினியின் மகன் இறந்துவிட்டதாக சொல்லும் காட்சிகள், அதற்காக வில்லனின் ஆட்களை எல்லாம் கொல்லும் காட்சிகள் எல்லாம் ஓகே.. ஆனால் ஏன் வில்லன் அப்போதே அந்த டீல் பேசவில்லை.. பயங்கரமான ஆள் ரஜினி என்பதை அறிய வைக்கப்பட்ட மாஸ் சீன்கள் ஓகே.. ஆனால் மகன் சொல்லி தான் அப்படி வில்லன் செய்தார் என்பதுபோல் எங்குமே காட்சிகள் இல்லை. படத்தில் வில்லனாக வருபவருடைய காட்சிகளை விட மகனாக வருபவரின் காட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தும்..
முதல் பாதி தரமான சம்பவமாக இருந்தாலும், இரண்டாவதுபாதியில் காட்சி அமைப்பில் அதிகப்படியான குழப்பம் இருக்கும். மகன் என்ன தவறு செய்தார். மகனுக்கான காட்சிகள் என்ன, அவருக்கும் வில்லனுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது பற்றி காட்சி அமைப்புகள் சரியாக இல்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது..
ரஜினி பலரையும் சுட்டுக்கொள்கிறார். ஒருமுறை கூட போலீஸ் விசாரிக்காதா, ஒரு ஏசி தற்கொலையை அவ்வளவு எளிதாக போலிஸ் கடந்து போகுமா.. எந்த ஒரு காட்சிகளும் அந்த இடத்தில் இல்லாமல் தெளிவாக இல்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது. பீஸ்ட் படத்தினை போலவே ஜெயிலர் படத்திலும் ஹீரோவுக்கு மாஸ் காட்டிவிட்டு, வழக்கம் போல் வில்லன்களுக்கு அவ்வளவு பவராக காட்டவில்லை.
வில்லன்களால் ரஜினியை ஒன்றுமே செய்ய முடியாது என்பது ஆரம்பத்திலேயே தெரிந்துவிடுகிறது. எமோசனல் பிளாக்மெயிலும் அவ்வளவு சிறப்பாக அமைக்கப்படவில்லை என்பதே ரசிகர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. ரஜினிக்கு கொடுக்கப்பட்ட பில்டப்பில் பாதிகூட வில்லனுக்கு இல்லாத காரணத்தால், இந்த படம் இரண்டாம் பாதியில் பலவீனமாக முடிந்தவிட்டதாக பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். நெல்சன் படத்தில் கோலமாவு கோகிலா, டாக்டர் படம் போல் அல்லாமல் பீஸ்ட், ஜெயிலர் ஆகியவை ஹீரோயிசத்தில் கவனம் செலுத்தி, கதையில் கோட்டைவிடப்பட்டதாகவே ரசிகர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
நான் கீர்த்தனா, கடந்த 8 வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். தமிழ் மினிட்ஸ் இணையதளத்தில் சப் எடிட்டராக இருக்கிறேன். தமிழகம், அரசியல், கிரைம், ட்ராவல்/பயணம், வேலைவாய்ப்பு, பொழுதுபோக்கு, வணிகம் செய்திகள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவள்.
