ராகவா லாரன்ஸின் டிரஸ்ட்டில் 20 பேருக்கு கொரோனா!!

நடிகர் ராகவா லாரன்ஸ் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஆசிரம் நடத்தி வருவதோடு, அவர் எடுக்கும் பல படங்களில் ஆதரவற்றோர், திருநங்கைகள், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு பட வாய்ப்புகளை வழங்கி வருகிறார். மனித ஜீவன்கள் எங்கு தவித்தாலும்…

நடிகர் ராகவா லாரன்ஸ் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஆசிரம் நடத்தி வருவதோடு, அவர் எடுக்கும் பல படங்களில் ஆதரவற்றோர், திருநங்கைகள், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு பட வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.

மனித ஜீவன்கள் எங்கு தவித்தாலும் உதவிக்கரம் நீட்டும் முதல் நபராக இருப்பவர் லாரன்ஸ் அவர்கள்தான். இவர் கொரோனா தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு 4 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளார்.

அதுதவிர தனது நண்பர்களுடன் இணைந்து ஒரு தன்னார்வ அமைப்பாக சினிமாப் பிரபலங்கள், தொழிலதிபர்களிடம் பொருளதவி மற்றும் பண உதவிகளைப் பெற்று, உணவுக்கு கஷ்டப்படும் மக்களுக்கு வழங்கி வந்தார்.

405f5d36cd2bbf8c7e718b3f9fd13443-1

தற்போது இவர் அசோக் நகரில் நடத்தி வரும் ஆதரவற்றோர் அறக்கட்டளையில் உள்ள 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின, மேலும் இதுகுறித்துப் பலரும் அவரைத் தொடர்பு கொள்ள முற்பட்டபோது அவர் அதுகுறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

அதாவது அந்த அறக்கட்டளையில் மொத்தமாக 20 பேருக்கு பாதிப்பு

மாணவிகள்- 10,

மாணவர்கள்- 5,

பணியாளர்கள்- 3,

சமையல்காரர்கள்- 2

இவர்கள் லயோலா கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலகப் பிரபலங்கள் சிலரும் “உங்க நல்ல மனசுக்கு எல்லாம் சரி ஆகிடும்” என்றி கூறியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன