அரசியலில் இருந்து சினிமாவுக்கு வந்து தோல்வியடைந்த திருநாவுக்கரசர் – ப்ளாஷ்பேக்!

By Staff

Published:

எம்.ஜி.ஆர் ஆட்சியில் உயரிய பொறுப்புக்களிலும் மூத்த அமைச்சராகவும் இருந்தவர் திருநாவுக்கரசு. எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு வந்த ஜெ ஆட்சியும் அவரின் செயல்பாடுகளும் பிடிக்காததால் அதிமுக இவருக்கு பிடிக்காமல் விலகி இருந்தார். ஒரு கட்டத்தில் பிஜேபியில் சேர்ந்து மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சராகவும் இருந்தார் திருநாவுக்கரசு.

4978841d8194925b1e1cccc75e2e367f

பின்பு அதிலிருந்தும் விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, அக்கட்சியின் தமிழக தலைவராகவும் இருந்து உள்ளார்.

இவ்வளவு சீனியர் அரசியல்வாதியான திருநாவுக்கரசு இப்போது திருநாவுக்கரசர் என பெயரில் சிறு மாற்றம் செய்துள்ளார்.

இவர் திருநாவுக்கரசுவாக எண்பதுகளில் புகழ்பெற்ற காலங்களில் படத்தயாரிப்பு, நடிப்பு உள்ளிட்டவைகளிலும் ஈடுபட்டார்.

அப்படியாக இவர் ராம்கி நடித்து பெரும் வெற்றி பெற்ற மருதுபாண்டி என்ற படத்தை தயாரித்துள்ளார். மனோஜ்குமார் இயக்கிய படமிது. அக்னிப்பார்வை என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக ஹீரோவாக இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னர் சினிமாவில் இருந்து விலகி தற்போது அரசியலில் உள்ளார்.

Leave a Comment