பிக்பாஸ் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்துவிட்டது.
இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர், இதில், முகென் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். 2 வது பரிசினை சாண்டி வென்றார்.
முகினுக்கு பல்வேறு பிரபலங்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர், வெளியே சென்று அவர் ரசிகர்களையும் சந்தித்து வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு காரணமே பணத்தையும் தாண்டி, பிரபலமாகி எப்படியாவது சினிமா வாய்ப்புகளைப் பெறுவதாக இருந்துவருகிறது.
தர்ஷன் இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பினைப் பெற, மற்றொருபுறம் மலேசியாவைச் சார்ந்த முகினுக்கு பட வாய்ப்புகள் வரத் துவங்கிவிட்டன.
அதாவது தளபதி 64 இல் முகின் நடிக்கவுள்ளதாக அதிகாரப் பூர்வத் தகவல்கள் வெளியான்நிலையில், இப்போது அவர் கௌதம் வாசுதேவ் மேனம் படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக அபிராமி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.