உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தலைவிரித்து ஆடி வரும் நிலையில் திரையுலகினர்களையும் இந்த கொரோனா வைரஸ் ஆட்டுவிக்கிறது. சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகளில் திரையரங்கில் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டுள்ளதால் திரையரங்கில் வருமானம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது
அதேபோல் பல நாடுகளில் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும், இதன் காரணமாக உலகம் முழுவதும் திரைத்துறைக்கு ரூபாய் 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் மீண்டும் எப்பொழுது இயல்பு நிலை திரும்பும் என தெரியாமல் திரையுலகினர் அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்பதால் இந்திய திரையுலகினர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.