டைட்டில் மேதை கரிசல்ராஜா

By Staff

Published:

சூப்பர் டைட்டில் கரிசல்ராஜா

80களில் 90களில் வந்த பெரும்பாலான முக்கிய திரைப்படங்களில் இவரின் டைட்டில் கார்டு பிரபலமானது பச்சை,மஞ்சள்,என பல வண்ணத்தில் மின்னினாலும் படத்தின் ஓபனிங்கான, டைட்டிலை செதுக்கிய மேதை
என்றே இவரைக்கூறலாம்.

02b0da782efac6426bc4b777051dd412

முன்னணி இயக்குனர்கள் எல்லோருடனும் இணைந்து பணியாற்றியுள்ளார் கரிசல்ராஜாஅவர்கள். இவரின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டமாகும் .

இவரின் புகைப்படம் கூட இணையத்தில் கிடைப்பது அரிது. 80களில் வந்த எல்லா படங்களிலும் நூற்றுக்கு 90 சதவீதம் கரிசல்ராஜாவின் டைட்டிலே வரும்.

தற்போது கம்ப்யூட்டர்களில் டைட்டில் டிசைன் செய்யப்படுகிறது.படம் தொடங்கியவுடன் ஸ்ஸ்ஸ்,புஸ்ஸ் என அதிரடி சவுண்டுகளுடன் டைட்டில் வருகிறது.

என்னதான் கம்ப்யூட்டர்ல டைட்டில் போட்டாலும் பரமசிவன் கழுத்திலுள்ள கங்கை கங்கை,வந்தாரை வாழவைக்கும் ஊரு என இசைஞானி இளையராஜா பாடல் பாடிய உடன் அப்படியே டைட்டில் உதயமாகி வரும் கரிசல்ராஜா  டைட்டிலை மறக்கமுடியாது.

பல படங்களில் பணியாற்றிய கரிசல்ராஜாபோன்றோர் சரியாக கவனிக்கப்படாதது பத்திரிக்கைகள் அவருக்கு முன்னுரிமை கொடுத்து எழுதாதது வருத்தமான விசயமே.

Leave a Comment