நடிகர் ரகுவரன் நினைவு தினம் இன்று

By Staff

Published:

ஏழாவது மனிதன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் ரகுவரன். தமிழில் இவரைப்போல ஒரு வில்லன் நடிகர் கிடைப்பது அரிது.

a7ab03f9d2e1d20feeac63b8b213f390-1

புரியாத புதிர் என்ற படத்தில் சாதாரண ஐ நோ ஐ நோ என்ற டயலாக்கையே கொடூரமான மாடுலேஷனிலும் எக்ஸ்ப்ரஷனிலும் பலமுறை பேசி இருப்பார். இது அந்த நேரத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

பூவிழி வாசலிலே படத்தில் ஊனமுற்றவராக வில்லனாக வித்தியாசமான வில்லனாக ஒரு குழந்தையை கொலை வெறியுடன் துரத்தி திரியும் காட்சிகளை ரசிகர்கள் என்றைக்கும் மறக்க முடியாது.

ரகுவரன் என்றால் பாட்ஷாதான். ஆண்டனி என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார். ரஜினிகாந்துடன் இவர் பஞ்ச் டயலாக் பேசி மோதிய காட்சிகள் அப்ளாஷ் அள்ளியது.

வில்லத்தனம் மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிப்பிலும் இவர் வலியவர். இவர் நடித்த லவ் டுடே படத்தில் அன்பான அப்பாவாக நல்ல நடிப்புத்திறனை வெளிப்படுத்தி இருப்பார். கடைசியாக நடித்த யாரடி நீ மோகினியிலும் அதைப்போன்ற ஒரு அப்பா பாத்திரத்தில் நடித்திருப்பார்.

குழந்தைக்காக ஏங்கும் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பழைய காதலை காதலியை மறக்க முடியாமல் சந்தர்ப்ப சூழ்நிலையால் வேறு ஒரு பெண்ணை மணந்து வாழும் ஒரு ஓடை நதியாகிறது படத்தில் அழகான அமைதியான நடிப்புத்திறனை வெளிப்படுத்தி இருப்பார். இது பிரபல இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய படம்.

பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

பிரபல எழுத்தாளர் சிவசங்கரி எழுத்தில் தியாகு படத்திலும் சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இவர் கடந்த 2008ம் ஆண்டு இதே நாளில் மரணமடைந்தார். இவர் மறைந்தாலும் இவர் படங்கள் இவர் நடிப்பு மக்கள் மனதை விட்டு மறையாது.

Leave a Comment