நயன் தாரா நடிப்பில் ஐரா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் கதை பேய்ப்படக்கதையாக இருந்தாலும் காலம் காலமாக தமிழ் சினிமாவில் சொல்லப்பட்ட பழிவாங்கும் அப்பாவி பெண் பேய்கதைதான்.
அப்பாவி பெண் பேயாய் வந்து பழிவாங்கும் கதை பற்றிய படத்துக்கு நாம் முப்பது ஆண்டுக்கு முன்னால் போவதற்கு தேவையில்லை.
சில வருடம் முன் வந்த அது, அரண்மனை உள்ளிட்ட பேய்ப்படங்கள் கூட அப்பாவி பெண் பேயாக பழிவாங்கும் கதைதான்.
இருப்பினும் தொடர்ந்து வித்தியாசமான படங்கள் என இது போல படங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.இருந்தாலும் அரைத்த மாவாகவே உள்ளன.
இதிலும் பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததால் பிடிக்காத நயன் தாரா பொள்ளாச்சியில் உள்ள பாட்டி வீட்டுக்கு செல்கிறார். அங்கு அவரை போன்றே தோற்றம் உள்ள கருப்பு பெண் பேய் நயன் தாரா பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.
அப்புறம் ப்ளாஷ்பேக் கருப்புபெண், அப்பாவிப்பெண் சமூகத்தில் எவ்வாறு நடத்தப்படுகிறாள் அவளின் நிலைக்கு யார் காரணம் என ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி காலத்து அதே கதை.
யோகிபாபுவின் நகைச்சுவையும் மிக சுமார். பாதி படத்துக்கு பின்னர் அவரும் படத்தில் இல்லை.
தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்து பார்த்து பார்த்து சலித்துப்போன கதையை படமாக எடுத்ததால் தேறுவது மிக கடினம்.