90களின் ஆரம்பத்தில் தேவர் மகன், சிங்கார வேலன், என் ராசாவின் மனசிலே என தொடர்ந்து நடிக்க ஆரம்பித்த வடிவேலு ஒரு கட்டத்தில் முக்கிய காமெடி நடிகரானார்.
தானாக காமெடி செய்து பின்பு தனக்கென சிங்கமுத்து, அல்வா வாசு, தியாகு என கூட்டணி சேர்த்து காமெடி செய்து காமெடியில் முக்கியத்துவம் பெறலானார் வடிவேலு.
ரஜினிகாந்த் சந்திரமுகி படத்தில் நடித்தபோது மலையாளத்தில் வெளியான மணிச்சித்ர தாழு கதையை மேக்கிங் செய்து நகைச்சுவை கதாபாத்திரத்தை பி. வாசு சொன்னபோது இந்த பாத்திரத்துக்கு வடிவேலு இருந்தால்தான் சரியாக இருக்கும் என வடிவேலுவை முதலில் புக் செய்ய சொல்லி இருக்கிறார் அந்த அளவு வடிவேலு ரசிகர்களில் இருந்து மிகப்பெரும் நட்சத்திரங்கள் விரும்பும் நபராக இருக்கிறார்
விஜயகாந்துடன் ஆரம்ப கால படங்களில் நடித்து வந்த வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும் அருகருகே உள்ள வீடு என்பதால் கடும் மோதல் ஏற்பட்டது.
விஜயகாந்த்தை எதிர்க்கிறேன் என விஜயகாந்த் கூட்டணி சேர்ந்த அதிமுகவையும் 2011 தேர்தலில்திமுக அணியில் இணைந்து எதிர்த்தார்.
இது கடும் வீழ்ச்சியை அவருக்கு கொடுத்தது.
அந்த தேர்தலோடு இவர் தொடர்ந்து நடிக்கும் படங்களுக்கு சிக்கல் வந்தது. நடிப்பதும் அவ்வப்போதுதான் என்றாலும் மீம்ஸ் க்ரியேட்டர்கள் எல்லா தரப்பினருக்கும் வடிவேலுவே முக்கிய கதாநாயகனாக இருக்கிறார்.
எல்லா தரப்பு விஷயங்களுக்கும் வடிவேலுவை முக்கிய அங்கமாக கொண்டு மீம்ஸ் தயாரிக்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்க்ஸில் வடிவேலு ஆடினால் எப்படி இருக்கும் ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரத்தில், அவர் நடித்தால் எப்படி இருக்கும் என தொடர்ந்து எல்லாருக்கும் பிடித்த நபராக பல வருடமாக வலம் வருகிறார்.