பூவே உனக்காக படத்தின் மூலம் விஜய்க்கென தனி அடையாளத்தை கொடுத்தவர் விக்ரமன். அந்த நேரத்தில் விஜய் நடித்த பல படங்கள் க்ளாமரை நம்பியே இருந்தது.
சங்கவியோ, சுவாதியோ, விஜய்க்கு கை கொடுப்பவர்களாக அந்த நேரத்தில் இருந்தார்கள். விஜய் நடிக்கும் ரசிகன் படத்தில் இருந்து அவரின் ரசிகன், விஷ்ணு, கோயமுத்தூர் மாப்ளே உள்ளிட்ட பல படங்கள் சங்கவியின் கவர்ச்சிக்காக ஓடிய படங்களாகும்.
விஜய்யின் படங்களை எல்லோரும் பார்க்க முடியாத சூழல் இருந்த போது முற்றிலும் யாரும் எதிர்பாராத வண்ணம் விஜய் நடித்த பூவே உனக்காக படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது.
குடும்பத்தோடு அனைவரும் பார்க்கும் படமாக அது அமைந்தது. ஆக விஜயின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர்தான் விஜயை அறிமுகப்படுத்தினாலும். விக்ரமன் தான் விஜய்யின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர்.
பூவே உனக்காக படம் 200 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது. அந்த ஒரு நட்பில் சில வருடங்கள் கழித்து விஜயை தனது படத்தில் மீண்டும் நடிக்க வைக்க இயக்குனர் விக்ரமன் முற்பட்டார்.
விஜய்யும் கால்ஷீட் கொடுத்து சில நாட்கள் நடித்து விட்டு ஏதோ ஒரு மனஸ்தாபத்தால் அப்படத்தில் இருந்து விலகி விட்டார். இவ்வளவுக்கும் விஜய்க்கு வாழ்வு கொடுத்த இயக்குனர் அல்லவா. இந்த நிகழ்வை அப்போதைய திரையுலகம் அதிர்ச்சியாக பார்த்தது.
அந்த படம் தான் உன்னை நினைத்து திரைப்படம். சில நாட்கள் கழித்து அப்படத்தில் சூர்யா நடித்தது குறிப்பிடத்தக்கது.