தமிழ் சினிமாவை கலக்கிய மலையாள இயக்குனர்கள்

மலையாள சினிமா எப்போதுமே யதார்த்த களமாக இருக்கும். படத்தின் பாடல்கள், காட்சியமைப்புகள் அனைத்துமே யதார்த்தமாகவே இருக்கும். படத்தில் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். கதை மிக தெளிவாக நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கும். குடும்பக்கதையாக இருந்தாலும், க்ரைம்…

மலையாள சினிமா எப்போதுமே யதார்த்த களமாக இருக்கும். படத்தின் பாடல்கள், காட்சியமைப்புகள் அனைத்துமே யதார்த்தமாகவே இருக்கும். படத்தில் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். கதை மிக தெளிவாக நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கும்.

1bd1a2eeae66beaede502beafdb2fd46

குடும்பக்கதையாக இருந்தாலும், க்ரைம் கதையாக இருந்தாலும் , காதல் கதையாக இருந்தாலும் காட்சியமைப்புகள் எல்லாமே மிக விரிவாகவே இருக்கும்.

மற்ற மொழி இயக்குனர்களை விட தமிழ் சினிமாக்களை அதிகம் இயக்கிய மாற்று மொழி இயக்குனர்கள் மலையாள இயக்குனர்களே.

ஐவி சசி 70களிலேயே இனிய தமிழ்ப்படங்களை இயக்கி இருக்கிறார். ஒரே வானம் ஒரே பூமி, அலாவுதீனும் அற்புத விளக்கும், குரு , இல்லம் என ஐவி சசியின் படங்கள் எல்லாமே திகட்டாத திரை விருந்துதான்.

இதில் ஐவி சசி இயக்கிய இல்லம் திரைப்படம் அனைவருக்கும் பிடித்தமான குடும்பக்கதை கொஞ்சம் காமெடி கலந்து அற்புதமாக இயக்கி இருப்பார். இது மலையாளத்தில் வெற்றி பெற்ற படத்தின் கதைதான்.

இது போல குடும்ப உறவுகளை மையப்படுத்தி வி.எம்.சி ஹனிபா என்ற கொச்சின் ஹனிபா இயக்கிய படங்கள் அதிகம். கலைஞர் வசனத்தில் இவர் இயக்கிய பாசப்பறவைகள், பாடாத தேனீக்கள் படங்கள் புகழ்பெற்றது.

இதில் பாசப்பறவைகள் மிக அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்த குடும்ப சித்திரம். தமிழில் விதி படத்திற்கு பிறகு அழுத்தமான பல கோர்ட் காட்சிகளை வைத்து வந்த படம். அந்த காலக்கட்டத்தில் தாய்மார்களின் ஆதரவை பெற்று நீண்ட நாள் ஓடியது இப்படம்.

அதே போல் பாலச்சந்திர மேனன் அவர்கள் இயக்கிய தாய்க்கு ஒரு தாலாட்டு படத்தையும் கூறலாம். இதுவும் குடும்ப உறவுகளையும் அதன் பெருமைகளையும் சொன்ன படம் இது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இயக்குனர் மது என்பவர் இயக்கிய மெளனம் சம்மதம் திரைப்படம் அற்புதமான த்ரில்லர் படம் கோர்ட் காட்சிகள் நிறைந்தது மலையாளத்தில் வெற்றி பெற்ற இந்த படத்தை தமிழில் மது இயக்கினார். கோர்ட் காட்சிகள் அதிகம் படத்தில் உண்டு. இதுவும் குடும்ப உறவுகளை முன்னிறுத்தி வந்த சஸ்பென்ஸ் படமாகும்.

இயக்குனர் பாஸிலின் படங்கள் என்றாலே குடும்ப படங்கள் தான் பேத்திக்கும் பாட்டிக்குமான பாசத்தை பூவே பூச்சூடாவில் ஆரம்பித்து, குழந்தை பாசத்தை பொம்முக்குட்டி அம்மாவுக்கு படத்தில் சொல்லி, வாய் பேச முடியாத சிறுவனின் பாசத்தை பூவிழி வாசலில் சொல்லி, அப்பா மகன் பாசத்தை காதலுக்கு மரியாதையில் சொல்லி, அம்மா மகள் பாசத்தை கற்பூர முல்லையில் சொல்லியவர். இவர் ஒரு சிறந்த கதை சொல்லி என கூறலாம்.

இப்படி மலையாளத்தில்இருந்து வந்து தமிழில் சிறந்த கதை சொல்லி இயக்குனர்கள் அதிகம் இன்னும் சில இயக்குனர்கள் பற்றி நாளை பார்ப்போம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன