தமிழ் சினிமாவின் பெரிய தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனம் காரைக்குடியில்தான் முதன் முதலில் தனது ஸ்டுடியோவை உருவாக்கி வேதாள உலகம் படத்தை ஆரம்பித்தது. பின்னர் காலப்போக்கில் அது சென்னை சென்று மிக பிரபலமானது.
காரைக்குடியை பூர்விகமாக கொண்டவர்கள் அதிகம் பேர். கவிஞர் கண்ணதாசன், காரைக்குடி நாராயணன், எஸ்.பி முத்துராமன், இராம நாராயணன், மனோரமா, பஞ்சு அருணாசலம் பட அதிபரும் அரசியல்வாதியுமான பழ.கருப்பையா இப்படி பல நபர்களை சொல்லலாம்.
இப்படியான காரைக்குடி இப்போது மிகப்பெரிய ஷூட்டிங் ஸ்பாட் ஆகும் சில வருடங்களுக்கு முன்பிருந்தே வந்த நிறைய ஹிட் படங்கள் காரைக்குடி செண்டிமெண்ட்டில் ஹிட் ஆனதை பார்த்து ஷூட்டிங் நடத்தியவர்கள் நிறைய டைரக்டர்கள்.
இயக்குனர் ஹரி தான் தொடங்கும் எந்த ஒரு படத்திலும் காரைக்குடியில் ஒரு காட்சியாவது எடுக்காமல் இருக்க மாட்டார். அதே போல் இயக்குனர் லிங்குசாமிக்கும் காரைக்குடி பேவரைட்.
பல வருடங்களுக்கு முன்பு முதன் முதலில் காரைக்குடி பகுதிகளையும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தி அந்த படத்தை வெற்றிப்படமாக்கியவர் விசு.
தனது சிதம்பர ரகசியம் படத்தின் படப்பிடிப்பை அங்கு நடத்தினார் விசு. அந்த படத்தில் காரைக்குடி மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகள் அனைத்துமே படமாக்கப்பட்டது.
அதன் பிறகு ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தின் பெரும்பகுதிகள் இந்த பகுதிகளில் படமாக்கப்பட்டது. காரைக்குடியின் ஆயிரம் ஜன்னல் வீடு தொடங்கி சுற்றுவட்டாரம் முழுவதும் இது போல வீடுகள் இருப்பதால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு இது புகழ்பெற்று விளங்குகிறது