கரம் மசாலா படங்களாக கொடுத்த மனோஜ்குமார்

By Staff

Published:

இயக்குனர் மனோஜ்குமார். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்தவர் இவர். சில வருடங்களுக்கு முன்பு வந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனின் அன்பான அப்பாவாக ஸ்டேஷன் மாஸ்டராக வந்து மனம் கவர்ந்தவர்.

d7c1f272b8ebecd99ac381cadebe3f2d

எண்பதுகளில் புகழ்பெற்ற இயக்குனரான இவர் மண்ணுக்குள் வைரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதலில் இயக்கிய படம் கடைசி காலங்களில் இயக்கிய படங்கள் எல்லாம் அமைதியான முறையிலும் சரிவிகித முறையிலும் அதிக வன்முறை இல்லாமலும் இருக்கும்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் இவர் இயக்கிய படங்கள் எல்லாம் வேற லெவலில் கடும் சண்டைக்காட்சிகள், போராட்டக்காட்சிகள், அதிகமான அழுகை காட்சிகள் நிறைந்திருக்கும்.

முதல் படமே வித்தியாசமான கதைதான். குழந்தை திருமணம் அதனால் 12 வயதில் விதவையாகும் சிறுமி தாத்தாவாக சிவாஜி என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமிது.

90களில் இவர் இயக்கிய மருதுபாண்டி, வெள்ளையதேவன், வண்டிச்சோலை சின்ராசு, செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட படங்கள் எல்லாம் வன்முறையின் உச்சமாக இருக்கும் அதிகமான ரத்தம், வெட்டு, குத்து கொலைகள், குடும்பதகராறு என இவரின் படங்கள் இருந்தன.

ஒரு திசையில் ஒரு இயக்குனர் தொடர்ந்து பயணித்தால் அதுபோல்தான் இறுதிவரை பொதுவாக பயணிப்பார்கள்.ஆனால் மனோஜ்குமாரை பொறுத்தவரை தன் திரைக்கதை வடிவத்தை அர்ஜூன், பிரகாஷ்ராஜ் நடித்த வானவில் படத்தில் இருந்து மாற்றிக்கொண்டார். வானவில் இவர் இயக்கிய வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம்.

அடுத்ததாக குருபார்வை, மாதவனை வைத்து இயக்கிய ஆர்யா, என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கினார்.தொடர்ந்து அதிகமான சண்டைக்காட்சிகள் கொண்ட படங்களை இயக்கிய இவர் இறுதிகட்டத்தில் தன் திரைக்கதையை காலக்கட்டத்திற்கேற்ப மாற்றிக்கொண்டார். அவ்வப்போது செலக்டிவ்வான படங்களில் தற்போதைக்கு நடித்து மட்டும் வருகிறார்இவர். படம் இயக்குவதில்லை.

Leave a Comment