பிரபல இசையமைப்பாளர் மரகதமணி. இவர் தமிழில் மரகதமணி எனவும் தெலுங்கில் கீரவாணி எனவும் அறியப்படுகிறார். சமீபத்தில் வந்த பாகுபலி சீரிஸ் படங்களுக்கு இவர்தான் இசை. இவரின் சகோதரர்தான் பாகுபலி இயக்குனர் ராஜமவுலி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் பாலச்சந்தர் மூலம் அழகன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் இவர். தமிழில் இசையமைத்த எல்லா படத்திலுமே இவரின் அனைத்து பாடலும் பெரிய ஹிட் ஆகிவிடும் அப்படி இல்லை என்றாலும் ஒரு பாடலாவது ஹிட் ஆகி விடும்.
முதல் படத்தில் இடம்பெற்ற சங்கீத ஸ்வரங்கள் என்ற பாடல் உலக பேமஸ். அதில் மம்முட்டியும், பானுப்ரியாவும் தொலைபேசியிலேயே விடிய விடிய காதல் கடலை போடும் காட்சிகளும் அன்றைய தூர்தர்ஷனின் முதல் நாள் மாலை ஒளிபரப்பு தொடங்கி அடுத்த நாள் காலை ஒளிபரப்பு தொடங்கும் வரை அருமையாக படமாக்கப்பட்டிருக்கும்.
அதே போல் வஸந்த் இயக்கிய நீ பாதி நான் பாதி படத்தின் சசச நி நி நிவேதா என்ற ஒரு பாடல் வித்தியாசமாக இருக்கும் நிவேதா நிவேதா என்றே பாடல் முழுவதும் எழுதப்பட்ட வரிகளுக்கு அழகான இசை வடிவம் கொடுத்திருப்பார்.
பாலச்சந்தரின் வானமே எல்லை பாடல்களும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. 2002ல் வந்த ஸ்டூடண்ட் நம்பர் ஒன் பாடல் மிகப்பெரிய பெயரை இவருக்கு பெற்றுக்கொடுத்தது. அதில் இடம்பெற்ற விழாமலே இருக்க முடியுமா பாடல் மிகப்பெரும் ஹிட் ஆகும்.
இப்படியாக மரகதமணி என்ற எஸ்.எஸ் கீரவாணியின் புகழை சொல்லி கொண்டே போகலாம். இன்று பிறந்த நாள் காணும் அவரை வாழ்த்துவோம்.