தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்தவர் பாரதிராஜா சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்து அதில் ஜெயித்து இயக்குனர் இமயம் என்ற பெயரெடுத்தவர். இமயம் என்பது மிக தொட முடியாத மலை உச்சி அப்படி ஒரு பெயரை பாரதிராஜா தமிழ் சினிமாவில் வாங்கி இருப்பது சிறப்பு.
16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக், கைதியின் டைரி,முதல் மரியாதை,வேதம் புதிது என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டியவர்.
முதல் மரியாதை போன்ற வித்தியாசமான காதல் பாடமும், ஜாதி ரீதியான தோஷங்களை களைந்த வேதம் புதிது போன்ற படங்கள் சிறந்த சமூக படங்களாகவும் சிகப்பு ரோஜாக்கள் போன்றவை சிறந்த திகில் படங்களாகவும் தமிழ் சினிமா வாழும் வரை வாழும்.
திரைப்படங்களில் இவரின் மோதிர கையால் குட்டுப்பட்டால் ராசி என அடிவாங்கிய நடிகர் நடிகைகள் உண்டு. ஒரு கண்டிப்பான வாத்தியார் போன்றவர் பாரதிராஜா.
தற்போதும் பாண்டிய நாடு, குரங்கு பொம்மை போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து நடிப்பிலும் நல்ல பெயர் வாங்கியவர் பாரதிராஜா. இன்று அவரின் பிறந்த நாள் ஆகும்.
அவருக்கு கங்கை அமரன் போன்றோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.