காஜா ஷெரீஃப் 80களில் பிஸியான குழந்தை நட்சத்திரமான இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரையில் பிறந்தவர்.
கமல்,விக்ரம்,ராஜ்கிரண்,செந்தில் போன்ற திறமையான நடிகர்கள் பிறந்த மண்ணில் பிறந்தவர் இவர்.
இவர்களைப்போலவே திறமையில் குறைந்தவர் அல்ல. 80களில் பெரும்பாலான கதாநாயகர்களுக்கு சிறுவயது தோற்றத்தில் நடித்திருப்பவர்.
100க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ்பெற்றவர்.குறிப்பாக உதிரிப்பூக்கள் படத்தில் தந்தைக்கு ஏங்கும் குழந்தையாக அஞ்சுவும் இவரும் நடித்திருப்பார்கள் குறிப்பாக அஸ்வினியுடன் அழகிய கண்ணே பாடலில் தோன்றுவது கொள்ளை அழகு.
சம்சாரம் அது மின்சாரம் படத்தில் பல முறை ப்ளஸ் டூ பெயிலாகும் கதாபாத்திரத்தில் நடித்து மிக புகழ் பெற்றார். அதன் மூலம் யார் இவர் என பலரது புருவங்களை உயர வைத்தார். அதற்கு முன்பே காஜா ஷெரீப் நடித்திருந்தாலும் காஜா ஷெரீப் என்றால் யார் என்ற அடையாளம் தெரியவைத்தவர்பாக்யராஜ். அவர் நடித்து இயக்கிய அந்த 7 நாட்கள் படத்தில் ஆசானே ஆசானே என்று பாக்யராஜ் அசிஸ்டண்டாக கூடவே வந்து குறும்பு செய்து பின்பு அவர் பாக்யராஜை விட, கடை ஓனராக மாறுவது அருமையாக இருக்கும்.
இது போல காளி படத்திலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். காதல் பரிசு படத்தில் சால்ட்கோட்டை சிலுவையாக வரும் கமலுடன் சேர்ந்து கலக்கியிருப்பார்.
தற்போது தனியாக ஒரு நட்சத்திர கலைக்குழு ஒன்று நடத்தி வருகிறார். முன்னாள் நடிகர் என்ற கர்வமில்லாமல் சகஜமாக எல்லோருடனும் பழகக்கூடிய மிகச்சிறந்த நடிகர் இவர்.