நடிகர் நாகேஷ் தற்போதைய திருப்பூர் மாவட்டம் அப்போதைய கோவை மாவட்டம் தாராபுரத்தில் 1933ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி இதே நாளில் பிறந்தார். 2009ம் ஆண்டு மறைந்தார்.
இடைப்பட்ட வருடங்களில் நாகேஷ் திரைத்துறையில் செய்த சாதனை, வார்த்தைகளில் சொல்லால் சொல்ல முடியாதவை, நாகேஷ் காமெடி வேடங்களில் நடித்து பலரை சிரிக்க வைத்தாலும், நீர்க்குமிழி என்ற படத்தில் சோகமே உருவான புற்றுநோயாளியாக நடித்திருப்பார். சர்வர் சுந்தரம் படத்தில் நல்லதொரு குணச்சித்திரவேடத்தில் நடித்திருப்பார்.
மக்களயா ராஜ்யா என்ற திரைப்படத்தில்தான் நாகேஷ் முதன் முதலில் நடித்தார் இது ஒரு கன்னடப்படம் ஆகும் அதற்கு பிறகு அன்னை, தெய்வத்தின் தெய்வம் படங்களில் நடித்தாலும் நான்காவதாக நடித்த நெஞ்சில் ஓர் ஆலயம் படமே நாகேஷ் என்றால் இவரா என்று கேட்க வைத்தது.
அந்தக்கால எம்.ஜி.ஆர்,சிவாஜி, ஜெய்சங்கர் ரஜினி, கமல், சத்யராஜ் துவங்கி விஜய் கால ஹீரோக்கள் வரை அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தவர்.
இவர் நடிக்க வருவதற்கு முன் ரயில்வேயில் அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தக்காலத்தில் வில்லன் போன்ற கதாபாத்திரத்தில் தில்லானா மோகனாம்பாள் என்ற படத்தில் வைத்தி என்ற கேரக்டரிலும், திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கேரக்டரிலும் நடித்திருப்பார். இந்த இரண்டு கேரக்டர்களையும் உருவாக்கியவர் ஏ.பி நாகராஜன். இவர் இந்த படங்களின் இயக்குனர்.
அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட சில படங்களில் வில்லனாகவும் நாகேஷ் நடித்திருந்தார்.
பெரும்பாலும் கமலஹாசன் தன் படங்களில் நாகேஷுக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்துவிடுவார். இவரின் மகன் ஆனந்த்பாபு ஒரு காலத்தில் முன்னணி நடிகர். நாகேஷ் தன் மகனை வைத்து பாடும் வானம்பாடி என்ற படத்தை தயாரித்தும் இருக்கிறார்.
நாகேஷ் 2009ம் ஆண்டு இம்மண்ணை விட்டு மறைந்தார். அவர் இறந்தாலும் அவர் பெயரை திரையுலகம் இன்னும் சொல்கிறது. அவரை போற்றும் வகையில் தபால் தலை வெளியிட்டும் அவரை கெளரப்படுத்தியுள்ளது.
இன்று நடிகர் நாகேஷின் பிறந்த நாள் ஆகும்.