இசைஞானி இளையராஜா அவர்கள் சென்னையில் உள்ள புகழ்பெற்ற நிறுவனமான பிரசாத் ஸ்டுடியோவில் தான் இசையமைத்து வருகிறார்.40 வருடத்துக்கும் மேலாக இங்குதான் கம்போஸிங் எல்லாம் நடக்கிறது. பிரசாத் ஸ்டுடியோவின் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்துதான் மேற்கண்ட பணிகள் நடந்து வருகிறது.
இளையராஜா எங்கிருப்பார் என்றால் அதிகபட்சம் இவர் இருப்பது பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தனது ரிக்கார்டிங் ஸ்டுடியோவில்தான். இந்நிலையில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இளையராஜா மேனேஜர் கஃபார் கொடுத்ததாக ஒரு புகார் சென்றுள்ளது அந்த புகார் என்ன என்றால் பிரசாத் ஸ்டுடியோ ஊழியர்கள் மேஜைகள், கணினிகள் போன்ற அலுவலக பொருட்களை ரெக்கார்டிங் ஸ்டுடியோ அருகிலேயே வைத்து வழியை அடைப்பதாகவும், இங்கு வைக்கப்பட்டுள்ள இசைக் கருவிகளுக்கு சேதம் ஏற்படுத்தும் நோக்கிலும், ரெக்கார்டிங் ஸ்டுடி யோவை ஆக்கிரமிக்கும் நோக்கி லும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகி கள் மற்றும் ஊழியர்கள் செயல் படுவதாகவும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இளைய ராஜா சார்பில் புகார் கொடுக்கப் பட்டுள்ளது.
இது குறித்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.