தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் நேற்று வெளியான ‘அசுரன்’ திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடனே பாசிட்டிவ் விமர்சனங்கள் பரவ ஆரம்பித்துவிட்டன. அதனால் முதல் காட்சியில் சுமாராகவே கூட்டம் இருந்த நிலையில் அடுத்த காட்சி ஹவுஸ்புல் ஆகிவிட்டது
இந்த நிலையில் படம் பார்த்தவர்கள் பெரும்பாலானோர் தனுஷுக்கு இந்த படத்திற்கு விருது நிச்சயம் கிடைக்கும் என்றும் படம் வேற லெவல் என்றும், தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி என்றாலே நம்பி படம் பார்க்கலாம் என்றும் கருத்து தெரிவித்தனர்.
படம் வேற லெவல் என்று கருத்து தெரிவித்த ரசிகர்கள், வெற்றிமாறனின் திரைக்கதை, ஜிவி பிரகாஷின் பின்னணி இசை சூப்பர் என்றும் கருத்து தெரிவித்தனர். ரசிகர்களின் பாசிட்டிவ் ரிசல்ட்டை பார்க்கும்போது தனுஷுக்கு இந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று கருத்து தெரிவித்தனர். மேலும் இதுவொரு படம் அல்ல அனைவருக்கும் ஒரு பாடம்’ என்று ஒரு ரசிகர் தெரிவித்தார்.