அஜீத்தின் ஒரு யங் லுக் நேற்று வைரலானது. சென்னை விமான நிலையத்தில் இவரது ரசிகர்கள் இவரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை தவிர்த்து மிகவும் யங்காக இவர் இருந்தார்.
இது அடுத்த படத்துக்காக என சொல்லப்பட்டது இந்த நிலையில் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டுள்ளார்.
சமீபத்தில் தமிழ்நாடு ரைபிள் கிளப் சார்பாக கோயமுத்தூரில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டார். தற்போது அவர் டெல்லியில் டாக்டர் கர்னி சிங் ஷூட்டிங் ரேஞ்சில் நடக்கும் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்ட புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படங்கள் அனைத்தும் வைரலாகி வருகிறது. இருப்பினும் அஜீத்தின் இந்த கெட் அப் அடுத்த ஹெச். வினோத்தின் படத்துக்காக என்பதில் மாற்றுக்கருத்தில்லை