பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷெரின் ஃபைனலுக்கு எப்படி வந்தார்? என்பதே பெரிய புதிராக உள்ளது. அவரை விட திறமையாகவும் மக்கள் செல்வாக்கு அதிகமாகவும் இருந்த தர்ஷன் வெளியேறியதும் புரியாத புதிராக உள்ளது
இந்த நிலையில் எப்படியோ ஃபைனலுக்கு ஷெரின் வந்துவிட்டாலும் அவருக்கும் ஃபைனலுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல்தான் வாக்கெடுப்பின் ரிசல்ட் தெரிவிக்கின்றது
பிக்பாஸ் எடுத்த வாக்கெடுப்பிலும் சரி, தனியார் இணையதளங்கள் எடுத்த வாக்கெடுப்பிலும் சரி, மக்கள் ஷெரினை கண்டுகொள்ளவே இல்லை. ஷெரின் எந்த வாக்கெடுப்பிலும் 5%க்கும் மேல் வாங்கவில்லை என்பது ஒரு பரிதாபமே. இதனால் கிட்டத்தட்ட ஃபைனலில் ஷெரின் இல்லை என்பது போல் தான் உள்ளது
ஷெரினுக்கு பதில் ஃபைனலுக்கு தர்ஷன் வந்திருந்தால் முகினுக்கும் லாஸ்லியாவுக்கும் நல்ல போட்டியை கொடுத்திருப்பார் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது