தவறாக செய்தி பரப்புபவர்கள் மீது யோகிபாபு கோபம்

சில வருடங்களாக தமிழ் சினிமா காமெடி நட்சத்திரமாக உச்சத்தில் இருப்பவர் யோகிபாபு. இவர் சில வருடங்களுக்கு முன் நடித்த படம் பட்லர் பாலு. இது முழு அளவில் எடுக்கப்படாமல் இப்போது யோகிபாபுவின் மார்க்கெட்டை வைத்து…

சில வருடங்களாக தமிழ் சினிமா காமெடி நட்சத்திரமாக உச்சத்தில் இருப்பவர் யோகிபாபு. இவர் சில வருடங்களுக்கு முன் நடித்த படம் பட்லர் பாலு. இது முழு அளவில் எடுக்கப்படாமல் இப்போது யோகிபாபுவின் மார்க்கெட்டை வைத்து மீண்டும் எடுக்கப்படுகிறது.

d3eb2d11c17c33e223dfb30e7a69f93f

இப்படத்தில் யோகிபாபு ஹீரோவாக நடிப்பதாக சொல்லப்பட்டது. மேலும் விஜயை வைத்து சுறா உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.பி ராஜகுமார் யோகிபாபுவுக்கு காமெடி டிராக் எழுதி கொடுப்பதாக செய்திகளும் வெளியானது.

எஸ்.பி ராஜகுமார் வடிவேலு உள்ளிட்ட முன்னணி நாயகர்களுக்கு காமெடி டிராக் எழுதியவர் ஆவார்.

இந்த செய்திகளை மறுத்துள்ள யோகிபாபு, பட்லர் பாலுவில் நான் ஹீரோவாக நடிக்கவில்லை, எஸ்.பி ராஜ்குமார் எனக்கு வசனங்கள் எல்லாம் எழுதி தருவதில்லை.

நானேதான் பேசி நடிக்கிறேன். ஸ்பாட்ல தோணுறதையும் சேர்த்துக்கொள்கிறேன். பட்லர் பாலு என்ற படத்தில் காமெடியனாக  எட்டு வருடங்களுக்கு முன்பு வெறும் நான்கு நாட்கள் மட்டும் தான் நடித்திருந்தேன். ஆனால் தற்போது நான்தான் அப்படத்தின் ஹீரோ என்பது போல் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் துளியும் உண்மை இல்லை.

ஏன் இது போல செய்திகளை பரப்புகிறார்கள் என தெரியவில்லை என வருத்தப்பட்டு பேசியுள்ளார் யோகிபாபு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன