பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சனி, ஞாயிறு அன்றும் போட்டியாளர்களை தொலைக்காட்சி மூலம் பேசி வந்த கமல்ஹாசன், போட்டியாளர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களிடம் சகஜமாக பேசினார்.
போட்டியாளர்கள் நால்வருக்கும் கமல்ஹாசன் எழுதிய கவிதையை வாசித்து காட்டினார். மேலும் போட்டியாளர்களிடம் வீடியோ காலில் பேசிய அனுபவம் குறித்தும் மற்ற அனுபவங்கள் குறித்து விரிவாக பேசினார்.
மேலும் ஃபைனல் போட்டியாளர்கள் நால்வருக்கும் தனித்தனியாக குறும்படங்களையும் கமல்ஹாசன் போட்டு காட்டினார். நால்வரும் தங்களுடைய குறும்படங்களை ரசித்து பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது