பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வெல்வார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் லாஸ்லியா, ஷெரினுக்கு முன்னரே எதிர்பாராதவிதமாக வெளியேறினார். இருப்பினும் டைட்டில் வென்ற முகினை விட தர்ஷனுக்குத்தான் அதிக ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் பிக்பாஸ் மேடையிலேயே ராஜ்கமல் பிலிம்ஸில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்ற தர்ஷன் பெற்றார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘என்னுடைய பேவரைட் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றும், அவரது படத்தை பார்த்து தான் சிறுவயதில் இருந்து தான் வளர்ந்ததாகவும், அவருடைய ஸ்டைலில் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவர் என்ன செய்தாலும் அது ஸ்டைலாக இருக்க வேண்டும் கூறியுள்ளார்.
கமலுடன் 100 நாட்கள் பிக்பாஸில் டிராவல் செய்து, கமலின் சொந்த நிறுவனத்தில் நடிக்க ஒப்பந்தமாகியும் அவர் தனக்கு பிடித்த நடிகர் கமல் என்று சொல்லாமல் ரஜினியை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது