’பிகில்’ படத்தில் நடித்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர்

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் இந்த ஆச்சரியமான தகவல்கள் ஒவ்வொரு நாளும் வெளியாகி வருகின்றன அந்த வகையில் இன்று வெளியான…

4d09b3deb19198e18f6db929968216ff

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் இந்த ஆச்சரியமான தகவல்கள் ஒவ்வொரு நாளும் வெளியாகி வருகின்றன

அந்த வகையில் இன்று வெளியான தகவலின்படி இந்த படத்தில் ஒரு சிறு கேரக்டரில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் வர்ணனையாளராக இருக்கும் அருண் வேணுகோபால் என்பவர் நடித்துள்ளார்

இவர் இந்த படத்தில் கால்பந்து போட்டியை வர்ணனை செய்வது போன்ற காட்சியில் நடித்து உள்ளதாகவும் தனது காட்சியின் டப்பிங் பணியை சற்றுமுன் முடிந்ததாகவும் அருண்வேணுகோபால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

இன்னும் இந்த படத்தின் என்னென்ன ஆச்சர்யமான செய்திகள் வெளிவர உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன