கடந்த மாதம் 19ம் தேதி பிகில் ஆடியோ லாஞ்ச் சென்னை சாய்ராம் கல்லூரியில் நடந்தது. இதில் பேசிய விவேக் சிவாஜியோடு நடிகர் விஜயை ஒப்பிட்டு புகழ்ந்து பேசி இருந்ததாக பலர் தவறான கருத்துக்களை தெரிவித்தனர்.
சமீபத்தில் பிரபல வார இதழ் பேட்டி ஒன்றில் கண்கலங்கிய விவேக் எனக்கு யார் இருக்கா நான் மகனை இழந்திட்டேன், சமீபத்தில் எங்க அம்மாவை இழந்துட்டேன், எங்க அப்பா இல்ல, என் குரு அப்துல் கலாம் அய்யாவும் இல்ல, என் சினிமா குரு பாலச்சந்தர் சாரும் இல்ல நான் சினிமா பணிகளில் அதிகம் இருப்பதில்லை. ஒவ்வொரு ஸ்கூலா போய் மரம்தான் நட்டுக்கிட்டு இருக்கேன். சினிமா மீது மிகுந்த மரியாதை வச்சிருக்கேன்.
நடிப்புக்கே இமயமான சிவாஜி சார் மீது மிகுந்த மரியாதை வச்சிருக்கேன். இப்பவும் மனசு விட்டு அழணும்னு தோணிச்சுனா சிவாஜி சார் நடிச்ச பாபு படத்தைதான் விரும்பி பார்ப்பேன். அவரை நான் தப்பா பேசுவேனா.
தாம்பரத்தில் இருந்து நீண்ட தூரத்துக்கு விஜய்யின் ஆடியோ லாஞ்ச் பார்ப்பதற்காக நீண்ட தூரம் கால்நடையாக நடந்து கூட பல பேர் சென்றார்கள். விஜய்க்கு இவ்வளவு ரசிகர்களா எனஆச்சரியப்பட்டேன்.
ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு மேனரிசம் உண்டு எம்.ஜி.ஆர் என் ரத்தமான உடன் பிறப்புகளே என்று சொல்வார். சிவாஜி சார் என்ன கண்மணிகளா என்பார் அதே போள் விஜய் என் நெஞ்சில் குடியிருக்கும் என சொல்கிறார். அதைத்தான் நான் எடுத்துக்காட்டாக சொன்னேன். உதாரணமாக இரும்புத்திரை என்ற சிவாஜி சார் படத்தில் நெஞ்சில் குடியிருக்கும் என்ற பாடலை பாடி இருப்பார் அதற்கு பிறகு விஜய்தான் அதை அதிகம் யூஸ் பண்றார் என்ற அடிப்படையில் சொன்னேன். ஆனால் ஏன் இதை தவறா எழுதுறாங்க சொல்றாங்கன்னுதான் தெரியல என மிகவும் வருத்தமுடன் சொன்னார் விவேக்.