விஜய் நடித்த பிகில் திரைப்படம் இன்று பல்வேறு தடைகளை தாண்டி வெளியாகி உள்ளது இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்ததா என்பதை தற்போது பார்ப்போம்
ராயப்பன் என்ற ரவுடி, தனது மகன் மைக்கேலை ரவுடியாக்காமல், ஒரு கால்பந்தாட்ட ஸ்போர்ட்ஸ்மேனாக வளர்க்கிறார். எந்த காரணத்தை முன்னிட்டு தனது ரெளடி தொழிலை தனது மகன் ஈடுபடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் ராயப்பன் கொலை செய்யப்பட, மைக்கேல் ரவுடியாக வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அதன்பின் தனது கால்பந்தாட்ட கனவு கலைந்தாலும் தன்னைப்போலவே கால்பந்தாட்ட கனவில் இருப்பவர்களின் கனவை நனவாக்குவது அவரது குறிக்கோளாக உள்ளது. அந்த கொள்கைகளுக்கு இடஞ்சல்களை அவர் எப்படி சமாளிக்கிறார், ஒரு பெண்கள் கால்பந்தாட்ட அணீயை எப்படி சாம்பியன் ஆக்குகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை
மைக்கேல் ராயப்பன் ஆகிய இரண்டு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ளார். குறிப்பாக ராயப்பன் கேரக்டர் விஜய் ரசிகர்கள் எதிர்பாராத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்சன், ரொமான்ஸ் மற்றும் நக்கல் நையாண்டி ஆகியவற்றில் கலக்கியுள்ளார்
நயன்தாராவுக்கு படத்திற்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்றாலும் ஒரு சில மாஸ் காட்சிகள் வைத்து அவரது கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் இயக்குனர் அட்லி. யோகி பாபு மற்றும் விவேக் காமெடி ஓரளவுக்கு சிரிக்க வைக்கின்றது. வில்லன்கள் ஜாக்கி ஷெராப் மற்றும் டேனியல் பாலாஜி ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கேரக்டர்களை சரியாக செய்துள்ளனர்
கால்பந்தாட்ட வீராங்கனைகளாக நடித்த அனைத்து நடிகைகளும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக ரோபோ சங்கரின் மகள் இந்துஜா மற்றும் ரெபா மோனிகா ஆகியவர்களின் கேரக்டர்கள் வலுவாக உள்ளது
இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் இசையில் அனைத்து பாடல்களும் கேட்கும் வகையில் உள்ளது. அதே போல் பின்னணி இசையிலும் கலக்கியுள்ளார். குறிப்பாக கால்பந்தாட்டப் போட்டி காட்சிகளில் அவரது இசை மெய்சிலிர்க்க வைக்கிறது
எடிட்டர் ரூபன் மற்றும் ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஆகியோர்களின் பணிகள் சிறப்பாக உள்ளது இயக்குனர். இயக்குனர் அட்லி மாஸ் காட்சிகளை கதைக்கு தேவையான இடங்களில் இணைத்து திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார். ஒரு ஸ்போர்ட்ஸ் படத்திற்கு தேவையான சென்டிமென்ட், ஆக்சன் காட்சிகளை தனது திரைக்கதையில் ஆங்காங்கே கூறியுள்ளார். வசனமும் ஒரு சில இடங்களில் நச்சென இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது
மொத்தத்தில் தீபாவளி விடுமுறையை கொண்டாடும் வகையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கத்தக்க வகையில் ஒரு படத்தை உருவாக்கியுள்ளனர் விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் என்பது குறிப்பிடத்தக்கது
4/5