சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது ஒன்றினை கோவாவில் நடைபெற இருக்கும் விழாவில் அரசு வழங்க இருக்கிறது.
கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இவ்விழாவின் 50வது ஆண்டு பொன்விழாவை ஒட்டி நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை விழா நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு நாட்டு திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று அறிவித்திருந்தார்.சினிமாவுக்கு சிறந்த சேவை புரிந்தததற்காக இவ்விருது வழங்கப்படுகிறது
ரஜினிகாந்துக்கு இவ்விருதுக்கு வாழ்த்துக்கள் வந்து கொண்டிருந்தாலும், கமலுக்கு ஏன் கொடுக்கவில்லை என கமல் ரசிகர்கள் பலரும் சினிமா ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கமல்தான் பல பரிட்சார்த்த முயற்சிகளை சினிமாவில் எடுத்தவர். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தவர் என எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் உட்பட பலரும் கூறி வருகின்றனர்.