ஆலம்பனா இந்த வார்த்தையை அந்தக்கால திரைப்படமான அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் பூதமாக நடித்த நடிகர் அசோகன் பேசியும். பட்டணத்தில் பூதம் என்ற திரைப்படத்திலும் பூதமாக நடித்த நடிகர் பேசிய புகழ்பெற்ற டயலாக் இது.
இந்த வார்த்தையை மையமாக வைத்து நகைச்சுவை சித்திரமாக ஆலம்பனா என்ற படம் உருவாகி வருகிறது. இதுவும் பூதம் பற்றிய கதையா என தெரியவில்லை.
இதில் வைபவ், பார்வதி, மற்றும் பலர் நடிக்கின்றனர். நகைச்சுவை வேடத்தில் முனீஸ்காந்த் நடிக்கிறார்.
கேஜேஆர் ஸ்டுடியோ தயாரிக்க பாரி கே விஜய் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.