அஜித்துக்கு முத்தம் கொடுக்க ஆசை: நடிகை ஸ்ரீரெட்டி

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தற்போது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் படத்திலும்,…

f438c97c581d965009b515c624fa5e98-1

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தற்போது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் படத்திலும், தன்னுடைய வாழ்க்கை வரலாறு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தை நடிகை ஸ்ரீரெட்டி சென்னையில் பார்த்துள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறியபோது, ‘அஜித் நடிப்பில் அண்மையில் வெளிவந்த, நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்ததற்கு பின், அவருக்கு மனதார முத்தம் கொடுக்க விரும்பினேன் என்று சர்ச்சைக்குரிய நடிகை ஸ்ரீ ரெட்டி என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே இவர் விஜய்யின் ‘பிகில்’ படத்தை பார்த்துவிட்டு ‘ராயப்பன்’ என்ற வயதான கெட்டப் விஜய்க்கு செட் ஆகவில்லை என்றும், இந்த கேரக்டரில் வேறு யாராவது நடித்திருக்கலாம் என்றும் கருத்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன