இடி விழுந்ததால் அதிர்ஷ்டகாரராக மாறிய விவசாயி!

பொதுவாக இடி விழுந்தால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்று தான் கூறுவார்கள். ஏனெனில் இடி விழுந்த இடத்தில் தீ பிடித்து கருகிய நிலையில் அந்த நிலமே பாழாவிடும். ஆனால் விவசாயி ஒருவர் நிலத்தில் விழுந்த…

f1169ad3dd9e192c6559db8071451451

பொதுவாக இடி விழுந்தால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்று தான் கூறுவார்கள். ஏனெனில் இடி விழுந்த இடத்தில் தீ பிடித்து கருகிய நிலையில் அந்த நிலமே பாழாவிடும். ஆனால் விவசாயி ஒருவர் நிலத்தில் விழுந்த அடியால் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது

சேந்தமங்கலத்தில் அருகில் இருக்கும் ஒரு பகுதியில் நேற்றிரவு கனமழை பெய்தது. மழையின்போது சரவணன் என்பவரது விவசாய நிலத்தில் திடீரென இடி விழுந்தது.

இதனை அடுத்து அந்த நிலத்தில் நான்கு இடங்களில் ஊற்று பெருகி உள்ளது. இந்த ஊற்றின் வழியாக தண்ணீர் வந்து அந்தப் பகுதி முழுவதுமே தண்ணீர் நிறைந்து காட்சியளிக்கிறது

இந்த தண்ணீரை சேமித்து வைத்தால் அந்த பகுதியில் உள்ள பல நிலங்களில் விவசாயம் செய்யலாம் என்பதால் அந்த விவசாயிக்கு அதிர்ஷ்டம் அடித்து உள்ளதாக கருதப்படுகிறது

திடீரென விவசாயி சரவணன் நிலத்தில் ஊற்றுக்கள் தோன்றியதை அந்த பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன