கேரள முதல்வராக இருப்பவர் பினராயி விஜயன். கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து மூத்த தலைவராக இருந்து முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவரின் ஆட்சிக்காலத்தில் கேரளா பல வரலாறு காணாத சர்ச்சைகளை சந்தித்தது எனலாம். ஒரு பக்கம் இவர் ஆட்சியின் புகழ் பாடினாலும் ஐயப்பன் கோவில் போன்ற சர்ச்சைக்குரிய விசயங்களில் இவரின் ஆட்சி விமர்சிக்கப்படாத நாளே இல்லை.
இந்த நிலையில் பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி நடிகர் மம்முட்டி ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஒன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின்
காட்சி ஒன்று கேரளா சட்டப்பேரவையில் அண்மையில் படமாக்கப்பட்டது.
ஷூட்டிங்கில் பங்கேற்ற மம்முட்டி அருகில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்துக்கு சென்று பினராயி விஜயனை சந்தித்து பேசியுள்ளார். இந்த படத்தை பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, அதனை மம்முட்டியின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.