துணை முதல்வரின் மனைவியாகும் ‘மன்மத ராசா’ நடிகை சாயாசிங்!

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கிய ஆக்சன் திரைப்படம் வரும் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது டுவிட்டரில் தினமும் இந்த…

159ff0670d637706bf9ba41f5b8e61bb-1

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கிய ஆக்சன் திரைப்படம் வரும் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது டுவிட்டரில் தினமும் இந்த படத்தில் நடித்த ஒரு கேரக்டர்கள் குறித்த விவரங்கள் வெளியாகி வருகின்றன

இந்த நிலையில் இந்த படத்தில் துணை முதல்வர் ஆர்கேஎஸ் என்ற கேரக்டருக்கு மனைவியாக நடிகை சாயாசிங் நடித்திருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே நடைபெறும் தனுஷ் நடித்த ‘திருடா திருடு’ என்ற படத்தின் நாயகியும், அந்த படத்தில் இடம்பெற்ற ‘மன்மதராசா’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

விஷால், தமன்னா, கபீர் சிங், ஐஸ்வர்யா லட்சுமி, யோகி பாபு, சாயாசிங், ராம்கி, பழகருப்பையா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். டட்லி ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்துள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன