விஜய்யின் அடுத்த படம் நீட் தேர்வு பற்றிய கதையா? பரபரப்பு தகவல்!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது…

0143098217d0999c0801cd520992a51c

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

இந்த படத்தில் நீட் தேர்வால் மாணவர்களின் சந்தித்த பிரச்னைகளும் அனிதா போன்ற மாணவிகள் செய்துகொண்ட தற்கொலை சம்பவங்கள் குறித்தும் படத்தின் கதை அமைந்துள்ளதாகவும், நீட் தேர்வுக்கு எதிரான காட்சியமைப்புகள், வசனங்களும் இந்த படத்தில் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் இந்த படத்தில் கல்லூரி பேராசிரியை ஆக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே விஜய் நடித்த மெர்சல் படத்தில் மருத்துவத் துறையில் உள்ள ஊழல் குறித்தும், சர்க்கார் படத்தில் இலவசங்கள் கொடுத்த சர்ச்சைக்குரிய காட்சிகளும் அமைந்ததை அடுத்து அந்த இரண்டு படங்களுக்கும் அரசியல்வாதிகளால் பிரச்சனைகள் ஏற்பட்டது

அதேபோல் பிகில் படத்தின் ஆடியோ விழாவில் விஜய் பேசிய ஒரு சர்ச்சை கருத்தும் பெரும் பிரச்சனையானது. இந்த நிலையில் தற்போது அவருடைய அடுத்தப் படமும் மத்திய மாநில அரசுகளை தாக்கும் வகையில் இருக்கும் என்று கூறப்படுவதால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன