கலையுலகின் கலைஞானி கமலுக்கு வரும் 17ம் தேதி மிகப்பெரும் விழா எடுக்கப்படுகிறது. கமல் திரையுலகுக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அதைக்கொண்டாடும் வகையில் விழா எடுக்கப்படுகிறது. இதில் இசைஞானி இளையராஜாவின் இசைக்கச்சேரியும் நடக்க இருக்கிறது.
இந்த விழாவுக்காக கமலின் பல்வேறு வடிவங்களுடன் ஓவியம் வரையப்பட்டு அதனுடன் யாருக்கு அழைப்பு கொடுக்கப்படுகிறதோ அவர் கமலோடு இணைந்து இருப்பதாக ஓவியம் தயார் செய்யப்பட்டது இதில் கமலின் நெருங்கிய நண்பர் பிரபுவுக்கும் அவர் சேர்ந்து இருப்பது போல புகைப்படத்துடன் கூடிய அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
பிரபுவின் வீடான அன்னை இல்லத்துக்கு சென்று இந்த அழைப்பிதழ் வழங்கப்பட்டது.