ரேடியோ மிர்ச்சி பண்பலை மூலம் அறியப்பட்டவர் சுசித்ரா. ஸ்டைலாக பேசும் குரல் வளம் உள்ளவராதலால் இவரது குரலுக்கு ஏற்றபடி பாடும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது பல திரைப்படங்களில் பாடியும் உள்ளார்.
இரண்டு வருடத்துக்கு முன்பு ஒரு நடிகர் மீது குற்றச்சாட்டையும் வைத்தார். இவரது பேட்டி அப்புறம் இவர் கொடுத்த விளக்கம் எல்லாமே அந்த விசயத்தில் முன்னுக்கு பின் முரணாக இருந்தது .
தனது டுவிட்டர் அக்கவுண்ட்டை யாரோ ஹேக் செய்து விளையாடுவதாகவும் தான் அந்த மாதிரி தகவல்கள் எதுவும் சொல்லவில்லை என இவரது பேச்சு குழப்பமாக இருந்தது.
சில நாட்களாக இவரது பேச்சு மீடியாக்களில் அடிபடாத நிலையில் இப்போது புதிதாக இவர் காணவில்லை என்ற புகார் கொடுக்கப்பட்டது அதன் அடிப்படையில் போலீசார் தேடி வந்தபோது சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டார்.
தன் மீது உள்ள கோபத்தில் தன் தங்கை சுஜிதா புகார் கொடுத்துவிட்டதாகவும் இவர் கூறியுள்ளார்.