ஒரே நாளில் இரண்டு விஷால் படம்: ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

விஷால், தமன்னா, யோகி பாபு உள்பட பலர் நடிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள’ஆக்சன்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் விஷாலின் அடுத்த படத்தின் டைட்டில் வெளீயாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘சக்ரா’ என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது…

ed3d03a2865d619711218736c6363d20

விஷால், தமன்னா, யோகி பாபு உள்பட பலர் நடிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ள’ஆக்சன்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் விஷாலின் அடுத்த படத்தின் டைட்டில் வெளீயாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘சக்ரா’ என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது

இயக்குனர் கௌதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் இரண்டு அட்டகாசமான டைட்டில் போஸ்டரை வெளியிட்டு படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

விஷாலுடன் ரெஜினா, ஸ்ரீநாத் மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே ஆகிய நாயகிகளும், காமெடி வேடத்தில் ரோபோ சங்கரும் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது

இன்று ஒரேநாளில் விஷாலின் ‘ஆக்சன்’ திரையரங்குகளிலும், விஷாலின் ‘சக்ரா’ இணையதளங்களிலும் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன