விஷாலின் ஆக்சன் திரைப்படம் எப்படி? டுவிட்டர் விமர்சனங்கள்

விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சாயா சிங், ராம்கி நடிப்பில் சுந்தர் சி. இயக்கத்தில், ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஆக்சன்’. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் பிரமாண்டமாக…

ad5dbcaa8cbbf54fa5a2d6bc29411bca

விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சாயா சிங், ராம்கி நடிப்பில் சுந்தர் சி. இயக்கத்தில், ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஆக்சன்’. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் பிரமாண்டமாக படமாக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் டீசரும், டிரைலரும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இன்று வெளியாகியிருக்கும் இந்த படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் சிலர் பதிவு செய்த டுவீட்டுக்களை தற்போது பார்ப்போம்

a9e0b2a60fcfa0af86f70c09e6448d63

‘ஆக்சன்’ஒரு அருமையான ஆக்சன் திரைப்படம் என்றும் சுந்தர் சி அவர்களிடமிருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் ஒருசில காட்சிகள் புத்திசாலித்தனமாக இருப்பதாகவும் இசை மற்றும் பின்னணி இசை சூப்பர் என்றும் ஒரு வர் பதிவு செய்துள்ளார்.

தியா என்ற கேரக்டரில் நடித்திருக்கும் தமன்னா கேரக்டர் கமெர்ஷியலாக இல்லாமல் ஆக்சன் பாணியில் இருப்பதாகவும், தமன்னாவின் அதிரடிக்காகவே இந்த படத்தை பார்க்கலாம் என்றும் ஒருவர் டுவீட் செய்துள்ளார்.

f27fe2af8ea05fb21fc3a4f22ca84421

இரகசிய ஆபரேஷன் ஸ்பெஷலிஸ்ட்டாக விஷாலும் அவருக்கு உதவியாக தமன்னாவும் நடித்துள்ள இந்த படம் நிச்சயம் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்றும் இன்னொருவர் டுவீட் செய்துள்ளார்.

மொத்தத்தில் ஆக்சன் திரைப்படம் ‘ஆக்சன்’ ரசிகர்களை ஏமாற்றாது என்றே முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன