கமல்ஹாசன் ஒடிசாவில் நடந்த விருது விழாவில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பியுள்ளார். சமீபத்தில் அவரை கெளரவிக்கும் விதமாக கமல்60 விழா நடைபெற்றது. பரபரப்பான இச்சூழ்நிலைகளில் நாளை கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறதாம்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் வெளியிட்டிருக்கும் செய்தியில் கடந்த 2016ல் காலில் நம்மவருக்கு எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட காயம் காரணமாக அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டது.அப்போது அவருக்கு காலில் டைட்டேனியம் கம்பி பொறுத்தப்பட்டது.
அரசியல் மற்றும் சினிமாவில் இருந்த தொடர் வேலைப்பளு காரணமாக அவருக்கு அக்கம்பியை அகற்றும் நிகழ்வு நடைபெறாமல் சூழல் அமையாமல் இருந்தது.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி அக்கம்பியை அகற்றும் அறுவை சிகிச்சையை நாளை கமலுக்கு மேற்கொள்ளப்பட இருக்கிறது. என அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.