திருமணம் குறித்த நயன்தாராவின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் விக்னேஷ் சிவன்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு 35 வயதுக்கு மேல் ஆகியும் இன்னும் அவர் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக இருந்து வருகிறார். ரூ5 கோடி முதல் 7 கோடி வரை ஒரு படத்திற்கு சம்பளம்…

f67e8246386a76ea4202693449867a37-1

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு 35 வயதுக்கு மேல் ஆகியும் இன்னும் அவர் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக இருந்து வருகிறார். ரூ5 கோடி முதல் 7 கோடி வரை ஒரு படத்திற்கு சம்பளம் வாங்கும் இவருக்கு மேலும் படங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன
தற்போது நயன்தாரா இரண்டு படங்களில் நடித்துக் கொண்டும் இரண்டு படங்களில் கமிட் ஆகியும் உள்ளதால் அவர் தனது தற்போதைய படங்களை முடிக்கவே இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது

1fbcffda9a61993bd0be3f665e080232

இந்த நிலையில் தனது நீண்டநாள் காதலரான விக்னேஷ் சிவனும் அவரது குடும்பத்தினரும் விரைவில் திருமணம் செய்ய வேண்டும் என்று நயன்தாராவை வற்புறுத்துவதாக தெரிகிறது ஆனால் நான் திருமணம் செய்தால் தன்னுடைய சினிமா கேரியர் பாதிக்கப்படும் என்பதால் அவர் திருமணத்துக்கு யோசிப்பதாகவும் இன்னும் ஒரு சில ஆண்டுகள் பொறுத்து திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் அவர் விக்னேஷ் சிவனிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது

எனவே நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் இந்த ஆண்டு மட்டுமன்றி அடுத்த ஆண்டும் நடக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன