நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள ஆதித்ய வர்மா படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில் இந்த படம் எப்படி உள்ளது என்று முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
படம் பார்த்த ஒரு பெண்மணி கூறுகையில் தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி 16 அடிதான் பாயணும் விக்ரமின் மகன் 32 அடி பாய்ஞ்சுருக்கார் என விமர்சித்துள்ளார்.
துருவ் விக்ரமின் நடிப்பு நன்றாக இருப்பதாகவும் படம் சிறப்பாக உள்ளதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டியை விட இப்படம் நன்றாக உள்ளதாக பல ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.