நடிகர் கமலஹாசனுக்கு நேற்று காலில் ஆபரேஷன் நடந்தது . கடந்த 2016ம் ஆண்டு படப்பிடிப்பில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக காலில் கம்பி வைத்து பொருத்தப்பட்டிருந்தது.
இப்போது சரியாகி விட்டதால் அந்த ப்ளேட்டை அகற்றும் பணிக்காக சின்ன அறுவை சிகிச்சை நேற்று நடந்தது.
இதை குறிப்பிட்ட கமல் ரசிகர்கள் குணா படத்தில் வரும் எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும் உங்களுக்கான காயம் சீக்கிரம் ஆறணும் ஆண்டவரே என அவர் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதோடு அவர்கள் கெட்வெல்சூன் என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஹேஸ்டேக்கையும் பிரபலபடுத்தி வருகின்றனர்.