சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் லைக்கா நிறுவனத்தின் பெரும் பொருட்செலவில் தயாராகியுள்ள ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் வரும் 27ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது
இதனையடுத்து முதலில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் 27ஆம் தேதி வெளியாகும் என இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். தலைவரின் தர்பார் படத்தின் சும்மா கிழிகிழி’ என்ற பாடல், எஸ் பி பாலசுப்பிரமணியன் அவர்களின் குரலில் விவேக் பாடல் வரிகளில் வரும் 27ம் தேதி வெளியாகும் என்றும் இந்த கொண்டாட்டத்திற்கு தலைவரின் ரசிகர்கள் தயாராகுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்த், நயன்தாரா மீண்டும் ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது