பிரபல பாப் பாடகி ஹாரா என்பவரின் காதலர் கடந்த ஆண்டு ஹாராவின் ஆபாச வீடியோவை வெளியிட்டதால் தொடரப்பட்ட வழக்கில் காதலர் சிறை சென்ற நிலையில் தற்போது பாடகி ஹாரா திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்
தென்கொரியாவின் பிரபல பாப் பாடகி ஹாரா நேற்று அவரது வீட்டில் மர்மமான முறையில் மரணம் அடைந்ததாகவும், அவரது உடலை மீட்ட தென்கொரியா போலீசார் அவரது மரணம் குறித்து விசாரணை நடந்து செய்து வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2008ஆம் ஆண்டு கடந்த 11 ஆண்டுகளாக தொலைக்காட்சி நடிகையாகவும் பாப் பாடகராகவும் இருந்து கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் குடியிருக்கும் ஹாராவின் பல பாப் பாடல்களை பாடி உலகப்புகழ் பெற்றார்
இந்த நிலையில் தான் கடந்த கடந்த 2018ஆம் ஆண்டு ஹாராவின் காதலர், ஹாராவுக்கே தெரியாமல் எடுத்த ஆபாச வீடியோ ஒன்றை வெளியிட்டதாகவும், இதனையடுத்து அவர் மீது ஹாரா வழக்கில் ஹாராவின் காதலருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹாராவின் திடீர் மறைவு அவரது தென்கொரிய ரசிகர்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது