கடந்த தீபாவளி தினமான அக்டோபர் 27-ஆம் தேதி விஜய் நடித்த ’பிகில்’ என்ற திரைப்படத்துடன் வெளியான திரைப்படம் தான் கார்த்தியின் ’கைதி’. இந்தத் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது ரிலீசாகி ஒரு மாதமே உள்ள நிலையில் திடீரென ஹாட்ஸ்டார் செயலியில் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது
’கைதி’ திரைப்படம் இன்னும் சென்னை உட்பட ஒரு சில நகரங்களீல்திரையிடப்பட்டு வரும் நிலையில் திடீரென அதன் தயாரிப்பாளர் மொபைல் ஹாட்ஸ்டார் செயலியில் வெளியிட்டது திரையரங்கு உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
ஆன்லைன் பைரஸி மற்றும் மூன்று வாரங்களுக்குப் பின்னர் வசூல் குறைவு ஆகிய காரணங்களால் இந்த படத்தை ஹாட்ஸ்டாரில் திரையிட அனுமதி அளித்துள்ளதாக இந்த தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் தெரிவித்துள்ளார்
இருப்பினும் இந்த விளக்கத்திற்கு சமாதானமடையாத சென்னையின் முக்கிய திரையரங்க வளாகம் ஒன்று ’கைதி’ திரைப்படத்திற்கு ஓரளவு வசூல் வந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென படத்தை தூக்கி விட்டது
இதுபோன்று ஒரே மாதத்தில் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு படத்தை மொபைல் செயலியில் வெளியிடுவது வியாபாரத்திற்கு நல்லதல்ல என்றும் அந்த திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.