கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சிகள் செந்தில் கணேஷ் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது தெரிந்ததே
இந்து பட்டம் வென்ற பிறகு அவரை திரைஉலகம் சிவப்பு கம்பளம் போர்வை வரவேற்றது. இதனை அடுத்து அவர் பல திரைப்படங்களில் பாடல்கள் பாடியும் ஒரு சில படங்களில் நடித்தும் வந்தார். தற்போது தமிழ் படங்களில் பிஸியான பாடகர்கள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கபாலி, காலா போன்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களை இயக்கிய பா.ரஞ்சித் தயாரித்து வரும் அடுத்த படமான ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை செந்தில் கணேஷ் பாடியுள்ளார்
’இருச்சியம்மா என்று தொடங்கும் ஒரு நெகழ்ச்சியான பாடலை செந்தில் கணேஷ் பாடிய உள்ளதாகவும் இந்த பாடலை எழுதிய உமாதேவியின் உணர்ச்சிமிக்க வரிகளை அவர் அனுபவித்து பாடி உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
மேலும் இந்த பாடலின் லிரிக் வீடியோ தற்போது சமூக இணையதளங்களில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலை பாடிய செந்தில் கணேஷூக்கும், பாடலை எழுதிய உமாதேவிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
’அட்டக்கத்தி’ தினேஷ், கயல் ஆனந்தி நடித்துள்ள இந்த படத்தை அதிரன் ஆதிரை என்பவர் இயக்கி உள்ளார்